×

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரம் கருத்தரங்கில் தகவல்

கிருஷ்ணகிரி, செப்.29: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஆயத்தமாகும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஈரநிலை இயக்க உதவி இயக்குநர் மணிஷ் மீனா பங்கேற்று, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றம் குறித்து விளக்கி பேசினார். பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன், அருண்குமார், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தெரிவித்து, பயிரிடப்பட வேண்டிய மாற்றுப்பயிர் வகைள் குறித்தும் விளக்கப் படங்கள் மூலம் தெளிவாக விவரித்தனர்.

தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் உதவி இயக்குநர்கள் மணிஷ் மீனா, யோகேஷ்குமார் ஆகியோர், தமிழ்நாடு அளவில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்கள் குறித்து விவரித்து, அதனை கையாள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினர். பின்னர், கிருஷ்ணகிரி சமூகக்காடுகள் கோட்ட அலுவலர் சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்படுத்துவற்கான காரணம் குறித்தும், அதனை எதிர்கொள்ள துறை மூலம் நடவு செய்யப்படவுள்ள மரக்கன்றுகள் குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து, 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற அறம் விதை அறக்கட்டளை நிர்வாகி அருண், வனத்துறையுடன் இணைந்த பசுமை போர்வையை அதிகரித்து, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்தும், காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் அனிதா, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகளில், மாணவர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு குறித்தும் விளக்கினர். பின்னர், 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற பிரசன்ன வெங்கடேஷ், அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர்களுடன் கலந்துரையாடி, அனைத்து பருவநிலை மாற்றத்தை கையாள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் கறித்து கலந்துரையாடி கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக வன உயிரின காப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டு, 2022-23ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, பிளாஸ்டிக்கை தவிர்த்து பசுமை போர்வையை ஏற்படுத்துவது குறித்து பேசினார். கருத்தரங்கில் அனைத்து துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரம் கருத்தரங்கில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...