×

அதிமுகவுக்கு புரட்சி பாரதம் ஆதரவு

சென்னை: புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அதிமுகவுக்கு புரட்சி பாரதம் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Revolution Bharat ,AIADMK ,CHENNAI ,Pratchi Bharatham ,KV Kuppam ,MLA ,Pooja Jaganmoorthy ,Pratchiti ,Bharatham ,Dinakaran ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...