- அனந்தா பத்மநாபா
- சுவாமி வராதம்
- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- எய்மலையான் கோவில்
- திருமலா
- அனந்தா பத்மநாபா சுவாமி வராதம்
- சக்ரதத்தலவர்
- தீர்த்தவாரி
- திருப்பதி எச்சுமாலயன் கோயில் தெப்பகுளம்
- சக்ரதல்வர் தீர்த்தவாரி
- எச்சுமலயன் கோவில்
- தின மலர்
திருமலை: அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.அளவிட முடியாத செல்வ செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.
கலியுகத்தில் திருப்பதியில் ஏழுமலையானாக அருள்பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு. திருமலையில் உள்ள தெப்பக்குளத்தில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நேற்று காலை நடந்தது. முன்னதாக ஏழுமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்து தெப்பகுளத்தில் எழுந்தருளினார். அங்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
The post அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி appeared first on Dinakaran.