×

பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் தறிகெட்டு ஓடிய கார் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி: ஆட்டோ உள்பட 4 வாகனம் சேதம், தொழிலதிபர் கைது; கார் பறிமுதல்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் கார் ஓட்டிச் சென்றவர், பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் தறிகெட்டு ஓடிய கார், சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். ஆட்டோ உள்பட 4 வாகனங்கள் சேதமடைந்தன. புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (47). தொழிலதிபரான இவர், மொத்தமாக ரசாயனம் கொள்முதல் செய்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெயக்குமார் தனது காரில் கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையில் சென்று கொண்டிருந்தார். பாதாள அம்மன் கோயில் தெருவில் சென்றபோது, பிரேக் பிடித்து காரை நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது, பிரேக் பிடிப்பதற்கு பதில், ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார். இதனால், கார் அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடி, சாலையில் நடந்து சென்ற கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையை சேர்ந்த பெயின்டர் பழனி (52), கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்த யஷ்வந்த் (71) ஆகியோர் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்ேடா, 3 பைக்குகள் மீது மோதி நின்றது. இதில் பழனி, யஷ்வந்த் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். யஷ்வந்த் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் ஜெயக்குமாரை கைது செய்தனர். மேலும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புழுதிவாக்கம், ஜேக்கப் தெருவை சேர்ந்தவர் கணேசன் (63), தனியார் நிறுவன டிரைவர்.

நேற்று முன்தினம் அதிகாலை தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை டெம்போ டிராவலரில் ஏற்றிக் கொண்டு பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி சென்றார். பள்ளிக்கரணை, தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்ற ட்ரை சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் டிரை சைக்கிள் ஓட்டி வந்த 40 வயது மதிக்கதக்க நபர் இறந்தார். இவர், யார் என விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, வேன் டிரைவர் கணேசனை கைது செய்தனர்.

The post பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் தறிகெட்டு ஓடிய கார் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி: ஆட்டோ உள்பட 4 வாகனம் சேதம், தொழிலதிபர் கைது; கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kilipakkam ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...