×

வீட்டை காலி செய்ய கோரி போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்: கமிஷனரிடம் பேராசிரியை புகார்

சென்னை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார். அப்போது, மந்தைவெளி சம்பந்தம் தெருவை சேர்ந்த பேராசிரியை ஜெயந்தி புகார் ஒன்று அளித்தார். அதில், நான், மாநில கல்லூரியில் துணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் இறந்துவிட்டார். தற்போது நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே மின்சார கட்டணம் தொடர்பாக பிரச்னை உள்ளது.

இதுதொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் என்னை கட்டாயப்படுத்தி, வீட்டை காலி செய்கிறேன் என்று எழுதி வாங்கிக் கொண்டார். இதுதொடர்பாக நான் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறியதால், கடந்த 21ம் தேதி மாலை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து மிரட்டுகின்றனர். எனவே காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

The post வீட்டை காலி செய்ய கோரி போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்: கமிஷனரிடம் பேராசிரியை புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sandeep Roy Rathore ,Manthaivela ,Dinakaran ,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...