×

தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி ‘‘தமிழ்நாட்டில் டெங்குவுக்கு 2012ல் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 26 பேர் மரணமடைந்தனர்.

அதேபோல் 2017ல் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்தனர். தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுத்ததால் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனவரி 1 முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் இறந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த உயிரிழப்பு ஏற்படாத வகையில் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது’’ என்றார்.

The post தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nadu ,Thuthukudi ,Department of Public Health and Prevention of Disease ,Initial ,Health Station ,Puthukkotte, Thuthukudi District ,Tamil Nadu ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...