×

டெங்கு காய்ச்சல் பரவல் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் அபராதம் வசூல்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள்மீது அபராதம் விதிக்கப்படும் என திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து நகரமன்றத் தலைவர் மூர்த்தி ஆலோசனையின் பேரில், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா உத்தரவின்படி கடந்த சில நாட்களாக தூய்மை அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று முன்தினம் ஒரே நாளில் கொசு உற்பத்திக்கு காரணமானவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கூறுகையில், ‘‘திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக 105 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்கள் வீடுகளுக்கு தேடி வரும் நகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ’’ என்றார்.

The post டெங்கு காய்ச்சல் பரவல் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Tiruvekkadu ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ