×

துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு 4வது தங்கப் பதக்கம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் துப்பாக்கிசுடுதலில், இந்தியா 4வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது. ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியின் பைனலில் சரப்ஜோஜித் சிங், அர்ஜுன் சிங் சீமா, ஷிவா நார்வால் ஆகியோரடங்கிய இந்திய அணி ஒட்டுமொத்தமாக 1734 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது.

இந்த போட்டியில் சீன அணி 1733 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், வியட்னாம் அணி (1730) வெண்கலமும் வென்றன. ஹாங்சோ தொடரின் துப்பாக்கிசுடுதலில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

The post துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு 4வது தங்கப் பதக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Hangzhou ,Asian Games Men ,Dinakaran ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...