ஆடி இந்தியா நிறுவனம், கியூ 5 லிமிடெட் எடிஷன் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிஷனில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.1 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 240 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது.
முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தாலும், சீட்கள் பிரவுன் நிறத்தில் இடம் பெற்றுள்ளன. 8 ஏர் பேக்குகள், சிங்கிள் பிரேம் கிரில், பனோரமிக் சன்ரூப், வயர்லெஸ் சார்ஜிங், 30 வண்ணங்களை வெளிப்படுத்தும் ஆம்பியண்ட் லைட்டிங், 10.1 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 19 ஸ்பீக்கர்களுடன் கூடிய பாங்க் அண்ட் ஒலூஃப்சன் சவுண்ட் சிஸ்டம், உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.69.72 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post ஆடி கியூ5 லிமிடெட் எடிஷன் appeared first on Dinakaran.