ஒன்றிய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் பிரிவில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Commandant (Communication): 13 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது: 35 வயதிற்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: Telecommunication Engineering/Electrical Communication Engineering/Electronics Engineering பாடத்தில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electronics/Computer Science பாடத்தில் எம்எஸ்சி பட்டம்.சாஸ்த்ரா சீமாபால் படை நிர்வாகத்தினரால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 165 செ.மீ., உயரம். மார்பளவு சாதாரண நிலையில் 81 செ. மீட்டரும், விரிவடைந்த நிலையில்86 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினர் ஆகியோருக்கு ₹400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.10.2023
The post துணை ராணுவ படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் appeared first on Dinakaran.