×

வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 9வது நாளாக குளிக்க தடை..!!

தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க 9வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீரின் அளவு அதிகரித்து தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கடந்த 8 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில் தற்போதும் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறையாமல் அதிகரித்து காணப்படுவதால் 9வது நாளாக சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட நிலையில் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 9வது நாளாக குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Bath ,Periyakulam Kumbakkar ,Honey District ,Periyakulam ,Dinakaran ,
× RELATED உடலில் அதிசயங்களை நிகழ்த்தும் ஆவாரம்பூ!