×

பரமக்குடி அருகே ஊரணியில் முளைப்பாரியை கரைக்க போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே ஊரணியில் முளைப்பாரியை கரைக்க போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கீழ்பார்திபனூர் கிராமத்திலுள்ள மந்தை பிடாரி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துவரும் பெண்கள் அதனை ஊரின் நடுவில் உள்ள ஊரணியில் கரைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஊரணியில் முளைப்பாரி ஓடுகளை கரைப்பதற்கு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றம் நிலவியதால் ஊரணியில் கரைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்த கிராமமக்கள் போலீசார் அனுமதிகோரி ஊரணி கரையில் காத்திருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் எதிர்ப்பை மீறி ஊரணியில் இறங்கிய பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பரமக்குடி அருகே ஊரணியில் முளைப்பாரியை கரைக்க போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Orani ,Paramakudi ,Ramanathapuram ,Paramakkudy ,Ramanathapuram district ,Paramakkudi ,
× RELATED மாநில தடகள போட்டிபரமக்குடி வீரர்கள் பதக்கங்களை அள்ளினர்