×

தருமபுரி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் தங்கத்தை கொண்டு சென்றபோது வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்டது. 2 கார்களில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், பூலாம்பட்டி மேம்பாலம் அருகே தங்கத்தை கொள்ளையடித்தனர். தங்கத்தை பறிகொடுத்தவர்கள் காரிமங்கலம் போலீசில் அளித்த புகாரை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தருமபுரி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Karimangalam ,Dharmapuri district ,Bengaluru ,Dharumapuri ,Dinakaran ,
× RELATED வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது