×

டெங்கு காய்ச்சலுக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 வயது சிறுமி அபிநிதி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்தது. திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு கடந்த 23ம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக கடந்த 26ம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அபிநிதியின் சகோதரி யோகலட்சுமி, சகோதரன் புருஷோத்தமனும் சகோதர சிகிச்சை பெறுகின்றனர். திருப்பத்தூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post டெங்கு காய்ச்சலுக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri Government Hospital ,Tirupathur ,Darumapuri Government Hospital ,
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...