×

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு

சென்னை: அதிமுகவின் புதிய கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது கட்சி தலைமை மற்றும் பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் மாளிகையில் எடுக்கப்பட்ட முடிவு அனைவருக்கும் தெரியும். அதற்கு மேல் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணியில் இருப்பவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எந்த குழப்பமும் இல்லை. இதற்கு மேல் எந்த கருத்தும் இல்லை. புதிய கூட்டணி மற்றும் அந்த கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது கட்சி தலைமை மற்றும் பொதுச்செயலாளர் முடிவு செய்வார். தேர்தலுக்கு மே மாதம் வரை நேரம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கலாம், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தலுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

The post முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Former minister ,Jayakumar ,AIADMK ,Chennai ,
× RELATED காமெடி நடிகராகி விட்டார் ஓபிஎஸ்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்