×

நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வெளியேற்ற வட கொரியா முடிவு

சியோல்: வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வெளியேற்ற அந்த நாடு முடிவு செய்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர் டிராவிஸ் கிங் கடந்த ஜூலையில் தென் கொரியாவுக்கு சென்றிருந்தார். அப்போது அதிக பாதுகாப்பு கொண்ட, இரு நாடுகளின் எல்லையை கடந்து வட கொரியா பகுதிக்கு சென்று விட்டார். வட கொரிய ராணுவம் அவரை கைது செய்து விசாரித்து வந்தது.

அமெரிக்க ராணுவத்தில் நிலவிய இன பாகுபாடு மற்றும் மனிதாபமானமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்ததாக விசாரணையில் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அந்த ராணுவ வீரர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என வட கொரியா செய்தி ஸ்தாபனம் சென்டிரல் நியூஸ் ஏஜென்சி நேற்று தெரிவித்தது. எப்போது அவர் வெளியேற்றப்படுவார் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

The post நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வெளியேற்ற வட கொரியா முடிவு appeared first on Dinakaran.

Tags : North Korea ,US ,Seoul ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...