×

தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓபிஎஸ் அணியில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்; புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலான புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் க.ரவி எம்எல்ஏ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் எம்எல்ஏ, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், மகளிர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்.ஜெயசுதா அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு, தேனி, திருநெல்வேலி என செயல்பட்டு வந்த மாவட்ட கழக அமைப்புகள், இன்று முதல் அமைப்பு ரீதியாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டு பின்வரும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

மாவட்ட செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் (அரக்கோணம் (தனி), கோளிங்கர் – சு.ரவி எம்எல்ஏ மாவட்ட செயலாளர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் (ராணிப்பேட்டை, ஆற்காடு) – எஸ்.எம்.சுகுமார் மாவட்ட செயலாளர்.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்) – எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்டம் (ஆரணி, போளூர்) – எல்.ஜெயசுதா, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் (செய்யார், வந்தவாசி (தனி) – தூசி கே.மோகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் (கலசபாக்கம், செங்கம் (தனி) – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் (திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம்) – ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் (பாபநாசம், திருவையாறு) – எம்.ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) – எம்.சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் (பட்டுக்கோட்டை, பேராவூரணி) – சி.வி.சேகர்.

தேனி கிழக்கு மாவட்டம் (ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) – முருக்கோட்டை எம்.பி.ராமர், தேனி மேற்கு மாவட்டம் (போடிநாயக்கனூர், கம்பம்) – எஸ்.டி.கே.ஜக்கையன் திருநெல்வேலி மாநகர் மாவட்டம் (திருநெல்வேலி, பாளையங்கோட்டை) – தச்சை என்.கணேசராஜா, திருநெல்வேலி புறநகர் மாவட்டம் (அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம்) – இசக்கி சுப்பையா ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி, மாநகர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்- ஜெ.சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் – இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், காவிரி பகுதி செயலாளர் – ராம.ராமநாதன் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிார்கள்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் – என்.தளவாய்சுந்தரம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் – ஜெ.சீனிவாசன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் – இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகர செயலாளர் – ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்ட மாநகர செயலாளர் – எஸ்.சரணன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி கிழக்கு, புதுச்சேரி மேற்கு ஆகிய மாநில கழகங்கள், கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு இன்று முதல் ‘புதுச்சேரி மாநிலம்’ என ஒருங்கிணைக்கப்பட்டு, மாநில அதிமுக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநில அவைத்தலைவர் – ஜி.அன்பானந்தம் (லால்பேட்டை முதல்தெரு, வள்ளலார்நகர்), மாநில செயலாளர் – ஏ.அன்பழகன் (முன்னாள் எம்எல்ஏ), மாநில இணை செயலாளர்கள் – மு.ராமதாஸ், எஸ்.வீரம்மாள், எம்.மகாதேவி, மாநில துணை செயலாளர்கள் – உமா என்ற கோவிந்தம்மாள், வையாபுரி மணிகண்டன், டி.குணசேகரன், மாநில பொருளாளர் – பி.ரவி பாண்டுரங்கன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓபிஎஸ் அணியில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்; புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OPS ,Theni, Thanjavur, ,Tirunelveli ,Edappadi Palaniswami ,CHENNAI ,Theni ,Thanjavur ,Theni, ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுக்குழு விவகாரம் ஓ. பன்னீர்...