×

நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர்; மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் சூரிய உதயத்தின் போது இயக்கத்திற்கு வந்து ஆய்வு பணியை தொடங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி நிலவில் சூரியன் மறைந்ததும் கடந்த 4-ம் தேதி லேண்டர் மற்றும் ரோவரின் ஆய்வு பணிகளை விஞ்ஞானிகள் நிறுத்தி இருந்தனர்.

இதை தொடர்ந்து சூரிய உதயத்திற்கு பிறகு அவற்றில் இருந்து சூரிய சக்தியை பெற்று ரோவர் மற்றும் லேண்டர் கடந்த 22-ம் தேதி மீண்டும் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி அவற்றில் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் வரவில்லை. இதனால் எதிர்காலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வரும் சாத்தியக்கூறுகள் குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின் மேற்பரப்பு குளிர்ந்த வானிலையை எதிர்கொள்ளும் வகையிலான உபகரணங்கள் அவற்றுக்குள் இடம்பெறாதது இதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.

The post நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர்; மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : moon ,ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...