×

ஐஸிங் கேக்

தேவையானவை :

ஆப்பிள் – 1/2 கிலோ
மைதா – 500 கிராம்
வெண்ணெய் – 375 கிராம்
ஐஸிங் சர்க்கரை – 200 கிராம்
மில்க் மெய்ட் – 50 கிராம்
பால் – 50 மிலி
சர்க்கரை – 100 கிராம்
பட்டைத்தூள் – 5 கிராம்
பிரெட் தூள் – 100 கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதாமாவுடன் வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து வைக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஆப்பிள் மெதுவாக மாறிவிடும். இதனுடன் பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மேல் 10கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.

The post ஐஸிங் கேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...