×

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு ஆணை

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் TNPID சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து TNPID சிறப்பு நீதிமன்றத்தை அணுக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடுகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாகக்கூறி ஒரு லட்சத்திற்கும் மேலான முதலீட்டாளர்களிடம் ரூ.2438 கோடி மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக 60,000க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி அவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. ஆர்.கே.சுரேஷுக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு சென்றிருப்பதால் தன்னால் ஆஜராக முடியாது என உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தார்.

இதற்கிடையே ஆர்.கே.சுரேஷுக்கும், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி அவரது வாங்கிக்கணக்கை காவல்துறையினர் முடக்கம் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

வங்கிக்கணக்கு முடக்கப்பட்டிருப்பதால் தனக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அன்றாட நடைமுறைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். வங்கிக்கணக்கு முடக்கம் தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் அந்த நீதிமன்றத்தை நடவேண்டும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, TNPID சிறப்பு நீதிமன்றத்தை நாடுமாறு ஆர்.கே.சுரேஷ் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு ஆணை appeared first on Dinakaran.

Tags : Aruthra Gold ,RR ,K.K. ,Suresh ,Chennai ,PTI ,Actor ,R.R. ,TNPID ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கம்பம்மெட்டு மலைச்சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்து ஒருவர் பலி