×

சீலிட்ட உறையில் தவறான தகவல்களை தந்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்..!!

மதுரை : சீலிட்ட உறையில் தவறான தகவல்களை தந்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் விவகாரத்தில் உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பட்டு தேவானந்த் ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் ஒரு சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே தவறான தகவல்களை தரலாமா? என கேள்வியெழுப்பியது.

ஒன்றிய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தந்த தகவல்கள் தவறு; சீலிட்ட கவரில் கொடுத்துள்ளீர்கள். உங்களின் சிஸ்டமே சரியில்லை என கூறிய நீதிபதி, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அறிவித்தார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளே தவறான தகவல்களை தந்தால், நாட்டில் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கணினியில் பதிவாகியுள்ள தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்; நாடு முழுவதும் இதே முறைதான் என ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

முத்துகிருஷ்ணன் மனு: வழக்கு விவரம்

2018 பிப்ரவரி 24ல் ராணுவம் வெளியிட்ட பணியிடத்துக்கு விண்ணப்பித்து, அனைத்து தேர்விலும் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றார். 2018 ஜூலை 29ல் வெளியிட்ட தேர்வு முடிவில் 22 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் எங்களது பெயர் இடம்பெறவில்லை; கேட்டபோது காலி இடங்கள் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர்? எத்தனை பேர் தேர்வு? என்ற விவரம் இல்லை. இது சட்டவிரோதம்; இந்த அறிவிப்பை ரத்து செய்து விதிகளை பின்பற்றி அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். முறையான அறிவிப்பை வெளியிட்டு ராணுவ வீரர்கள் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என 2019ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

The post சீலிட்ட உறையில் தவறான தகவல்களை தந்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,Madurai ,ICOART Madurai ,Dinakaran ,
× RELATED தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை...