×

ரயில்வேயில் 2400 அப்ரன்டிஸ்கள் : ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வே பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 2400.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 29.8.2023 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician. Fitter/Plumber/Painter/Welder (Gas & Electric)/ COPA/ Diesel Mechanic/ Machinist/Motor Mechanic/Electronic Mechanic/ Wireman/Tailor/Systems Assistant/IT Mechanic/Tool Maintenance Assistantஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், இதர டிரேடுகளுக்கு ஒரு வருடமும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது ஒன்றிய ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ₹100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www. apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது ஐடிஐ படிப்பை பதிவு செய்து விட்டு பின்னர் www.rrccr.com என்ற இணையதளம் மூலமாக

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 28.9.2023.

The post ரயில்வேயில் 2400 அப்ரன்டிஸ்கள் : ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Central Railway Workshops ,Mumbai ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...