×

பாஜக உடனான கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவினர் இப்போது சொல்வது இல்லை என்பதே உண்மை: எச்.ராஜா பேட்டி

சென்னை: பாஜக உடனான கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவினர் இப்போது சொல்வது இல்லை என்பதே உண்மை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்படும் என்ற கோணத்தில் எச்.ராஜா பேட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக, இப்போது அதைச் சொல்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

கூட்டணி முறிவு குறித்து ஏன் அதிமுகவினர் பேசுவது இல்லை, அதன் உள்நோக்கம் என்ன என்பதற்குள் நான் செல்லவில்லை. பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவினர் இப்போது சொல்வது இல்லை என்பதே உண்மை. கூட்டணி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும் என கூறினார்.

“கூட்டணி முறிவு குறித்து மவுனம் காக்கும் அதிமுக”

கூட்டணி முறிவு குறித்தோ, பாஜக குறித்தோ கருத்து தெரிவிக்காமல் அதிமுக தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுத்தார். பாஜக, அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பினார். கூட்டணி முறிவு பற்றி அதிமுகவினர் பேசாமல் உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்ற கோணத்தில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.

The post பாஜக உடனான கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவினர் இப்போது சொல்வது இல்லை என்பதே உண்மை: எச்.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaka ,General ,H. ,Chennai ,Chief President ,
× RELATED உலகம் முழுவதும் போர் நாளுக்கு நாள் ஆபத்து : ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை