×

திருத்தணியில் அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த வெள்ளம்: தனியார் மண்டபத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு

திருவள்ளுர்: திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் அடுத்துள்ள அரசு மேல்நிலை பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று இப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைக்குள் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் இன்று கழிவு நீர்போல் வகுப்பறைக்குள் மழைநீர் வெள்ளம் தேங்கியிருப்பதை கண்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களை தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று படம் கற்பித்து வருகிறது.

குறிப்பிட்ட இந்த பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் தாழ்வாக கட்டப்பட்டிருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் புகுவது கடந்த 10 ஆண்டுகளாக வாடிக்கையாக இருந்து வருகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளி நிர்வாகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பள்ளியை அதிகாரிகள் ஆய்வு செய்து தேங்கிய நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post திருத்தணியில் அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த வெள்ளம்: தனியார் மண்டபத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Thiruvallurur ,Kanagamma ,Sinn ,
× RELATED பொதுமக்களின் பிரச்னைகள் உடனுக்குடன்...