×

நீலகிரி மாவட்டத்தில் காணொலி மூலம் ரூ.2.09 கோடி மதிப்பில் 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பள்ளி வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட நஞ்நாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.49.83 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.31.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கொட்டமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.33.05 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கூடலூர் அத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.32.65 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

குன்னூர் வட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட தேனலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.31.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, செயற்பொறியாளர் செல்வகுமரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி வட்டாட்சியர் சரவணகுமார், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், தரன், நஞ்சநாடு ஊராட்சித்தலைவர் சசிகலா, நஞ்சநாடு பள்ளி தலைமையாசிரியர் ஜெயா, ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் காணொலி மூலம் ரூ.2.09 கோடி மதிப்பில் 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nilgiri district ,Tamil Nadu ,M.K.Stalin ,CM ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்