×

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ மினி மாரத்தான்

*கலெக்டர் மகாபாரதி துவக்கி வைப்பு

*பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக வனாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதன் பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசானது பெண் கலவியை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக பெண் குழந்தைகளை காப்போம், பெற்ற குழந்தைகளுக்கு ஈற்பிப்போம் என்ற விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் மாவட்டத்தால் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் – 1098 அல்லது 1091 அல்லது 181 அல்லது மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04364 212429 என்ற எண்ணை அழைக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பினை உறுதி செய்திட, அனைத்து காவல் நிலையத்திலும் குழந்தை நேய பாதுகாவன் உங்களுக்காக காத்திருக்கிறார். பெண்குழந்தைகள் நம் கண்கள் தன்னம்பிக்கையும், வீரமும் ஊட்டி பாதுகாப்பது நம் கடமை.பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.மினி மாரத்தான் ஓட்டமானது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மணிக்கூண்டு வழியாக ராஜஸ்தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சென்றடைந்தது. இம்மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மினி மாரத்தான் ஓட்டத்தில் வெற்றபெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா, மாவட்ட சமூக தல அலுவலர் சுகிர்தா தேவி மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தண்டனைக்குரிய குற்றமாகும்

தமிழ்நாடு அரசானது சமூகநலத்துறை மூலம் புதுமைப்பெண் திட்டம், பள்ளிக்கல்விதுறையின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. வளரும் பருவத்தில் திருமண பாரம் வேண்டாம். குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

The post மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ மினி மாரத்தான் appeared first on Dinakaran.

Tags : Mayeladuthur ,Mahaparathi ,Mayaladuthurai ,Vanagam Social Welfare ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் திருவிக மார்க்கெட்...