×

திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால் விபத்து தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரி

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. நேற்று அதிகாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

திம்பம் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி ஓட ஆரம்பித்தது.கண் இமைக்கும் நேரத்தில் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி மலைப்பள்ளத்தில் உருண்டுவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த பொருட்களின் பாரம் காரணமாகவும், லாரியின் நடுப்பகுதி தரையில் தட்டியதாலும், டிரைவரின் முயற்சியாலும் லாரி நின்றது.

லாரியின் முன் பகுதி மட்டும் அந்தரத்தில் தொங்கியபடி மயிரிழையில் லாரி மலைப்பள்ளத்தில் கவிழ்ந்து விழுவது தவிர்க்கப்பட்டது. லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக கீழே இறங்கி உயிர் தப்பினார். லாரியை மீட்பதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

The post திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால் விபத்து தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரி appeared first on Dinakaran.

Tags : Thimbum ,Satyamangalam ,Erode district ,Satyamangalam- ,Mysore National Highway ,Pannari Amman Temple ,27 kantham ,Dinakaran ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது