×

நகப்பட்டி ஊராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டிடம் திறப்பு

காரைக்குடி, செப்.27: காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சி நகப்பட்டியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து மக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் டாக்டர் ஆறு.முருகப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, உதவிப் பொறியாளர் சுதா, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கமுத்து, ஊராட்சி துணைத்தலைவர் முத்துலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் பெரியசாமி, ஜோதி, விஜயகுமாரி, செல்வி, சுரேஷ், செல்வம், எம்.செல்வி, அந்தோனி சவரிசாந்தி மற்றும் ஊராட்சி செயலாளர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நகப்பட்டி ஊராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nagapatti Panchayat School ,Karaikudi ,Panchayat Union Project ,Surakudi Panchayat Nagapatti ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்