×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.எச். சேகர் வழங்கினார். கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், மேலக்கழனி, மெதிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இந்நிகழ்விற்கு, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பரிமளம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி காளத்தி அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் பாஸ்கர் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், வெங்கடாஜலபதி, மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர்கள் அமலா சரவணன், அரிபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் வள்ளியம்மாள் பழனி, திமுக நிர்வாகிகள் திருமலை, புலியூர் புருஷோத்தமன், மூர்த்தி, பிரபு, எளாவூர் லோகேஷ், மீசை ராஜா, பிரபாகரன், இளைஞரணி நத்தம் சரத்குமார், ஆத்துப்பாக்கம் விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ சி.எச் சேகர் கலந்து கொண்டு 2,000 பேருக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கினார். பள்ளி மாணவர் ஒருவருக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்கினார். இறுதியில் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சரவணன் நன்றி உரையாற்றினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,artist ,ceremony ,Kummhipundi ,CM ,Kummhipundi Eastern Union ,Artist Century Festival ,
× RELATED திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ...