×

புழல், வடபெரும்பாக்கம் இடையே அமைக்கப்படும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்:புழல், வடபெரும்பாக்கம் இடையே அமைக்கப்படும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர். சென்னை புழல் – வடபெரும்பாக்கம் பகுதிகளை இணைக்கும் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக, புழல் பாலாஜி நகர், சக்திவேல் நகர், கதிர்வேடு, சூரப்பட்டு, புத்தாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, புழல் ஏரி உபநீர் திறந்துவிடப்பட்டதால் பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு அதனை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை சார்பில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்ற பல்வேறு சிக்கல் உள்ளது. மேலும் நிலத்தை கையகப்படுத்த தனிநபர் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்கு முடிந்த பிறகுதான் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரும் அவல நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உயர் அதிகாரிகள் பாலம் பணியை முடித்து அதனை பொதுமக்கள் பயன்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல், வடபெரும்பாக்கம் இடையே அமைக்கப்படும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Vadaperumbakkam ,Chennai Puzhal ,
× RELATED சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில்...