×

முள்ளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.49 லட்சத்தில் குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம்: ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்

திருப்போரூர்: முள்ளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் நேய பள்ளிக்கட்டிடத்தினை ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன் திறந்து வைத்தார். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய முள்ளிப்பாக்கம் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சம் மதிப்பில் குழந்தைகள் நேய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முள்ளிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மணி தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எல்.இதயவர்மன், புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, சசிகலா, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவசங்கரன், ஜூலியட், ஊராட்சி மன்ற துணை தலைவர் இந்துமதி அருள்பிரகாசம், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

The post முள்ளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.49 லட்சத்தில் குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம்: ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Children's Neya School Building ,Mullipakkam Panchayat ,Union Committee ,President ,Tiruporur ,Ithayavarman ,Mullipakkam panchayat.… ,school ,
× RELATED ஆலத்தூர் ஒன்றிய குழு கூட்டம்