×

தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு அளித்துள்ளது. காவிரியில் விநாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட தமிழகம் கோரிய நிலையில் ஆணை பிறப்பித்துள்ளனர். அக்டோபர் மாதத்திற்கான 20.22 டிஎம்சி நீரை உரியநேரத்தில் காவிரியில் கர்நாடகா திறக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. தமிழ்நாட்டில் வாடும்பயிர்களை கருத்தில் கொண்டு நீரின் அளவை குறைக்காமல் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிப்பதாக கூட்டத்தில் கர்நாடக வாதிட்டது. காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக வாதிட்டது. காவிரி தொழிநுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டலா தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக குறைத்தது . காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வலியுறுத்திய நிலையில் தற்போது 3,000 கன அடியாக குறைந்துள்ளது

தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உத்தரவாக இருந்தது. ஆனால் தொடர்ந்து கர்நாடகம் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தற்போது திறந்து விட்டுள்ளது.

இதனிடையே, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கர்நாடகாவின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு அளித்துள்ளது. காவிரியில் விநாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட தமிழகம் கோரிய நிலையில் ஆணையிட்டுள்ளனர்.

 

 

The post தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kaviri Regulatory Committee ,Karnataka government ,Kaviri ,Tamil Nadu ,Delhi ,Cavieri ,Government of Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...