×

திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தொடங்கினார்கள் நகராட்சி அலுவலர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நவம்பர் 17ம் தேதி கார்த்திகை திருவிழா தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை நகராட்சி அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். தேரடி வீதி, கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றியுள்ளனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள செப். 21-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது.

காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவ.14-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். பக்தர்களின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நகராட்சி ஆணையம் தொடங்கியுள்ளது . அதன் அடிப்படையில் தேரடி வீதி, கடலைக்கடை சந்திப்பு மற்றும் வாகனங்கள் செல்ல எதுவாக பல்வேறு இடங்களில் உள்ள இடையூறுகளை காவல்துறை, நகராட்சி ஆணையம் அகற்றி வருகிறது.

The post திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தொடங்கினார்கள் நகராட்சி அலுவலர்கள் appeared first on Dinakaran.

Tags : Karthika Festival ,Thiruvanna Namalai ,Thiruvandamalai ,Thiruvanna Malay ,
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...