×

அவிநாசி அருகே சுடுகாட்டு பகுதியில் கட்டையால் அடித்து இளம்பெண் கொலை

*பலாத்காரம் செய்யப்பட்டரா? என போலீஸ் விசாரணை

அவிநாசி : அவிநாசி அருகே சுடுகாட்டு பகுதியில் இளம்பெண் கழுத்தை நெரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி இராக்கியாப்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.அப்போது அந்த இளம்பெண் கழுத்து நெரித்தும், கட்டையால் அடித்தும் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. பார்ப்பதற்கு வடமாநில பெண் போல் ஜீன்ஸ், பேண்ட், சுடிதார் அணிந்திருந்தார்.

போலீசார் பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சாமிநாதன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

அந்த இளம்பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து கிராம மக்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை நடக்கிறது. அந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்றும், அந்தப் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏதாவது இளம்பெண் காணாமல் போய் உள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அவிநாசி அருகே சுடுகாட்டு பகுதியில் கட்டையால் அடித்து இளம்பெண் கொலை appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Sudukatu ,
× RELATED பல்லடம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட...