×

ஆசியாவிலேயே மிக பழமையான சரசுவதி மகால் நூலகத்திற்கு மக்கள் வருகை அதிகரிப்பு 11 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

தஞ்சாவூர், செப். 26: 11 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 560 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு தாட்கோ நிதியுதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை 11 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஒப்படைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசியாவிலேயே மிக பழமையான சரசுவதி மகால் நூலகத்திற்கு மக்கள் வருகை அதிகரிப்பு 11 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் appeared first on Dinakaran.

Tags : Saraswati Mahal ,Library ,Asia ,Thanjavur ,District ,Collector ,Deepakjekub ,Saraswati Maghal Library ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி