×

க.மயிலாடும்பாறை அருகே சீமைகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

வருசநாடு, செப். 26: க.மயிலாடும்பாறை அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.மயிலாடும்பாறை அருகே ஓட்டணை கிராமத்தில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில வருடங்களாக சீமை கருவேலமரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் புதர்மண்டி காட்சியளிக்கிறது. கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நீதிமன்றம் வாயிலாக உத்தரவிட்டும் பல கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் இதுவரையும் கருவேல் மரங்கள் கண்மாயில் அகற்றப்படாமல் உள்ளதால் மிகவும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளன.

இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சீமைகருவேல் மரங்கள் எங்கள் பகுதியில் குறிப்பாக சிறுகுளம் கண்மாய் மற்றும் செங்குளம் கண்மாய் பகுதியில் அதிக அளவில் அகற்றப்படாமல் உள்ளது. எனவே விரைந்து அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றினால் தான் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அதிக அளவிலான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே உடனே அகற்ற வேண்டும் மேலும் கண்மாயின் ஆக்கிரமிப்பை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post க.மயிலாடும்பாறை அருகே சீமைகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : K. Mayiladumparai ,Varusanadu ,Mayiladumparai ,
× RELATED தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை