×

மாணிக்கவாசகபுரத்தில் புதிய மின் மாற்றி திறப்பு

சாத்தான்குளம், செப். 26: சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரத்தில் புதிய மின் மாற்றியை பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் திறந்து வைத்தார். சாத்தான்குளம் பேரூராட்சி 15வது வார்டுக்குட்பட்ட மாணிக்கவாசகபுரத்தில் சீரான மின் விநியோகம் செய்யும் வகையில் மின்வாரியம் சார்பில் 63 கேஏஎம் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. சாத்தான்குளம் மின் உதவி செயற்பொறியாளர் ரவீந்தரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப் முன்னிலை வகித்தார். இளநிலை பொறியாளர் நாகராஜன் வரவேற்றார். சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார். இதில் மாவட்ட திமுக பிரதிநிதிகள் சரவணன், வேல்துரை, பேரூராட்சி பணியாளர்கள் மணிராஜ், ஆத்தியப்பன், ஆறுமுகம் உள்பட மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மாணிக்கவாசகபுரத்தில் புதிய மின் மாற்றி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Manikavasakapuram ,Satankulam ,President ,Regini Stellabhai ,Manickavasakapuram ,Satankulam… ,
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்