×

செங்கோட்டை அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது

செங்கோட்டை, செப் 26: செங்கோட்டை அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய கேரள வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். தென்காசியில் இருந்து புறப்பட்ட தமிழக அரசுப் போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று கொட்டாரக்கரையை நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஆரியங்காவு கலால்துறை செக்போஸ்ட் பகுதிக்கு வந்தபோது போலீசார் பஸ்சை மறித்து சோதனை நடத்தினர். இதில் கேரளாவுக்கு அடிக்கடி கஞ்சா கடத்தும் வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம் பத்தனம்திட்டா கோலஞ்சேரி பகுதி பலகல் வீட்டு பகுதியைச் சேர்ந்த அணில் குமார் (எ) விஷ்ணு என்ற வாலிபர் ஒருவர், அந்த பஸ்சில் பயணிப்பதை கண்டறிந்து அவரிடம் சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் சுமார் 7.5 கிலோ கஞ்சாவை 4 பிளாஸ்டிக் பைகளில் பதுக்கிவைத்து கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அஞ்சல் கலால் ரேஞ்சில் ஒப்படைத்தனர். கைதான குமார் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதாக கலால்துறையினர் தெரிவித்தனர்.

The post செங்கோட்டை அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ganja ,Red Fort ,Sengottai ,Tenkasi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை