×

அரசு பஸ் கவிழ்ந்து 26 பேர் காயம்

ராமநாதபுரம், செப்.26: தஞ்சாவூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்ஸை டிரைவர் முத்துக்கிருஷ்ணன்(42) ஓட்டியுள்ளார். கண்டக்டராக ராஜா(43) இருந்துள்ளார். பஸ் ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் வழியில் உச்சிப்புளி அருகே பெருங்குளம் என்ற இடத்தில் குறுக்கே டூவீலரில் ஒருவர் சென்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதை தவிர்க்க டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர வெட்டுக்கிடங்கில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் முத்துக்கிருஷ்ணன், கண்டக்டர் ராஜா, பயணிகள் 24 பேர் என மொத்தம் 26 பேருக்கு சிராய்ப்புகள், கை முறிவு என காயங்கள் ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் உதவியுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பஸ் கவிழ்ந்து 26 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thanjavur ,Rameswaram ,Muthukrishnan ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் அருகே குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்!