×

கன்னட அமைப்பு செப்.29ல் பந்த் இன்று பெங்களூரு முழு அடைப்பு: விவசாய சங்கம் அறிவிப்பு

பெங்களூரு: விவசாய சங்கத்தினர் , காவிரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதை கண்டித்து பெங்களூருவில் இன்று பந்த் நடத்துகின்றனர்; வருகிற 29ம் தேதி நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக பந்த் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநில விவசாய சங்கத் தலைவர் படகலபுரா நாகேந்திரா, குருபூரு சாந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதை கண்டித்து பெங்களூரு பந்த் இன்று நடக்கிறது. விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றார். இதைத்தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29ம் தேதி கர்நாடக பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி செப்.29ம் தேதி டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெறுகிறது என்றார்.

The post கன்னட அமைப்பு செப்.29ல் பந்த் இன்று பெங்களூரு முழு அடைப்பு: விவசாய சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Tamil Nadu ,Farmers Union ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...