புதுடெல்லி: இமாச்சல் மற்றும் கர்நாடகா சட்டப்பேரவை தோல்வியால் பா.ஜ வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டீஸ்கரில் 21 தொகுதிக்கும், மபியில் 39 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. நேற்று மபியில் மேலும் 39 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமானி சட்டப்பேரவை தொகுதியில் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும், நரசிங்பூரில் ஒன்றிய ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிரகலாத் பட்டேல், நிவாஸ் தொகுதியில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் பகன் சிங் குலாசேத்தும் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தூர் 1 தொகுதியில் பா.ஜ தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர பா.ஜ எம்பிக்கள் ராகேஷ் சிங், கணேஷ்சிங், ரித்தி பதக், உதய் பிரதாப்சிங் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. 230 உறுப்பினர்கள் கொண்ட மபி சட்டப்பேரவைக்கு பா.ஜ சார்பில் இதுவரை 78 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
The post ம.பி தேர்தல் பாஜ 2வது பட்டியலில் 3 ஒன்றிய அமைச்சர்கள் appeared first on Dinakaran.