×

பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 1000 கனஅடி உபரி நீர் திறப்பு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியில் உள்ள 16 மதகுகளில் 2 மதகுகள் வழியே தலா 500 கனஅடி வீதம் 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீர் இருப்பு 2792 மில்லியன் கன அடியாக உள்ளது. தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1520 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பூண்டி அணையின் மொத்த உயரமான 35 அடியில் நீர்மட்டம் 33.90 அடியாக உள்ளது.

இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் எண்ணூர் சென்று வங்கக்கடலில் கலக்கும். இதனால் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்பாக்கம் கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, சோமதேவன்பட்டு, நெய்யூர், தாமரைப்பாக்கம், திருகண்டலம், ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே பூண்டி ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்றுவது இதுவே முதல்முறையாகும்.

The post பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 1000 கனஅடி உபரி நீர் திறப்பு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Lake Bundi ,mosastalam river ,Chennai ,Kozestalam river ,Bundi Lake ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்