×

பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்

தேவையானவை:

பீர்க்கங்காய் தோல் – 1 கப்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
புளி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 3/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைக்கவும். பிறகு ஆறவைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து பரிமாறவும்.

The post பீர்க்கங்காய் தோல் புதினா துவையல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…