×

ஆபத்தை உணராமல் ஆறுகளில் குளியல்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பெரியகுளம்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரியகுளம் பகுதியில் ஆபத்தை உணராமல் ஆறுகளில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரியகுளம் பகுதியில் உள்ள வராகநதி ஆறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கும்பக்கரை ஆறு மற்றும் செலும்பாறில் இறங்கி குளித்து வருகின்றனர்.  தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆறுகளில் காட்டாறு வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் குழந்தைகள், சிறுவர்கள், வயதானர்வகள்  என அனைவரும் கூட்டம், கூட்டமாக ஆறுகளில் குளித்து வருகின்றனர். குறிப்பாக ஆற்றங்கரையோரம் உள்ள மாந்தோப்பு உரிமையாளர்கள், சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.100 முதல் 200 வரை பெற்றுக் கொண்டு தோப்புகள் வழியாக ஆறுகளுக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  …

The post ஆபத்தை உணராமல் ஆறுகளில் குளியல்: அதிகாரிகள் கவனிப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்