×

காரைக்கால் ஜீவா நகரில் கழிவு நீர் போல வரும் குடிநீரால் மக்கள் அவதி: குடிநீர் பிரச்சினையை உடனே சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை

காரைக்கால்: காரைக்கால் அருகே அசுத்தமாக வரும் தண்ணீரால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி நெடுங்காடு தொகுதியில் உள்ளது ஜீவ நகர் கிராமம். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் படிக்கட்டுகள் இடிந்து சேதமடைந்துள்ளதால் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் தண்ணீர் கழிவுநீர் போல வருகிறது.

துர்நாற்றத்துடன் வரும் நீரை எதற்குமே பயன்படுத்த முடியாத நிலையில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள குழாயில் பிடித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், வராத குடிநீருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் வரி மட்டும் சரியாக வசூலிப்பதாகவும் ஜீவா நகர் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரமற்ற குடிநீரால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு பலர் உள்ளாகி வருகின்றனர். எனவே விரைந்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதே ஜீவா நகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post காரைக்கால் ஜீவா நகரில் கழிவு நீர் போல வரும் குடிநீரால் மக்கள் அவதி: குடிநீர் பிரச்சினையை உடனே சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karaikal Zeeva ,Karaikal ,Jiva City ,
× RELATED காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக்...