×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மகரம், மேஷம், கடகம் மற்றும் துலா ராசிக்காரர்கள்: திங்கட் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை அன்று பத்மாவதி தாயாரை ரோஸ் நிற பூக்கள் கொண்டு வழிபட்டு அர்ச்சனை செய்து கொண்டால் பணம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: புதன் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் வைத்தீரன் கோயில் அல்லது மருந்தீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டால் இடர்பாடுகள் நீங்கி பணம் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுர் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நாகாபரணம் சூடிய சிவபெருமானை வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும். பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Kakaram ,Aries ,Kadakam ,Tula ,Padmavati ,Dinakaran ,
× RELATED மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை