×

கடலூரில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் மக்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மும்முடிசோழகன் மக்கள் என்.எல்.சி. சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக கடந்த 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை நிலங்களை கையகப்படுத்தி உள்ளன. இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பும், நிரந்தர வேலையும் வழங்கவில்லை. மேலும், தங்கள் நிலத்திற்கு குறைந்த இழப்பீடு தொகையை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அதனை கண்டித்து மாற்று குடியிருப்பு, நிரந்த வேலை, புதிய நிலம் இழப்பீடு தொகையை வழங்க கோரி என்.எல்.சி. நிறுவனம், ஒன்றிய அரசையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்ட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறை வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது போலீசார் உரிய நடவடிக்கை மற்றும் என்.எல்.சி. நிறுவனத்துடன் மதியம் 2 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

The post கடலூரில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Kammapuram ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...