×

சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்

 


சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பூ, மரக்கட்டைகள், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் என சுமார் 70 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. டன் கணக்கில் சேர்ந்த மாலைகள், துணிகள், அலங்கார பொருட்கள் ஆகியவை கழிவுகளாக சேர்ந்துள்ளது. தூய்மை பணியாளர்களின் உழைப்பால் கடலில் கழிவுகள் சேர்வது தவிர்க்கப்பட்டது. ஜே.சி.பி மூலம் அகற்றும் பணிகளில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான சிலைகள் கரைப்பால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், சென்னை, ஆவடி, தாம்பரம் என 26 வழித்தடங்கள் மூலம் 2,148 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 4 இடங்களில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் இந்த ஆண்டு 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 425 சிலைகள், ஆவடி மாநகர காவல் எல்லையில் 204 சிலைகள் உட்பட மொத்தம் 2,148 சிலைகளை இந்து அமைப்புகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

6 நாட்கள் வழிபாடு முடிந்து 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்றம் என 4 இடங்கள் மட்டுமே மாநகர காவல் துறை அனுமதி வழங்கப்பட்டது.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் கடந்த 2 நாட்களில் ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மாநகர தெற்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் கிரேன் மற்றும் கன்வேயர் பெல்ட் என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், வாகனத்தில் வந்த சிலைகளை அதிக நேரம் நிறுத்தி வைக்காமல் உடனுக்குடன் கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டது.

இதேபோல், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்றம் என மொத்தம் 4 இடங்கள் 2,148 சிலைகள் அமைதியான முறையில் சிலைகள் கரைக்கப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 200 சிலைகளும், நேற்று மீதமிருந்த 1,948 சிலைகளும் 4 இடங்களில் கரைக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் 1,197 சிலைகள் கரைக்கப்பட்டது.

பெரிய சிலைகளுடன் வீடுகளில் வழிபாடு செய்யப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய சிலைகளும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வந்து தனது குடும்பத்தினருடன் பொதுமக்கள் சூடம் ஏற்றி கடலில் கரைத்தனர். போலீசாரின் திட்டமிட்ட பாதுகாப்பு நடவடிக்கையால் இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக முடிந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து போலீசாருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார்.

The post சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Vineyagar ,Marina Beach ,Chennai ,Marina coast of ,Vijayakar ,Chennai Marina Beach ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்