×

மராத்தி டி.வி. சேனலை 3 நாட்கள் முடக்கும் உத்தரவுக்கு தடை

மும்பை: பாரதிய ஜனதா கட்சியின் மகாராஷ்டிரா மாநில துணை தலைவர் கிரித் சோமையா. இவர் முன்னாள் எம்.பி.யுமாவார். கிரித் சோமையா ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை லோக்சாகி என்ற மராத்தி டி.வி சேனல் ஜூலை மாதம் 17ம் தேதி ஒளிபரப்பியது. இது போன்ற 36 வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அந்த சேனல் அறிவித்தது. இது அரசியலில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது.

இந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட மராத்தி டி.வி. சேனலை 72 மணி நேரம் முடக்குமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை டி.வி. சேனல் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சேனல் நிர்வாகிகள் ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரணை நடத்திய நீதிபதி, அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதித்தார். இதனை தொடர்ந்து மராத்தி சேனல் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது.

The post மராத்தி டி.வி. சேனலை 3 நாட்கள் முடக்கும் உத்தரவுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Maharashtra ,vice-president ,Bharatiya Janata Party ,Grit Somaia ,M. GP ,Yumawar ,Grith Somaia ,D. ,Dinakaran ,
× RELATED மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில்...