×

இளையான்குடி பகுதியில் ஊரணி சீரமைப்பு பணிகள் ஆய்வு

இளையான்குடி, செப்.25: இளையான்குடி பகுதியில் தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத்துறை செயலர் மற்றும் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி லால்வேனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழாயூர் பகுதியில் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் ஊரணியை பார்வையிட்டு, பணிகள் மற்றும் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். இதில் ஆர்டிஓ சுகிதா, ஆணையாளர் முத்துக்குமரன், தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், சுகாதார ஆய்வாளர் கணேசன், மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருப்புவனம் பேரூராட்சியில் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள், கிளாதிரி ஊராட்சியில், கோனார்பட்டி – மணப்பட்டி இடையே முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெறும் ரூ.32.90 லட்சம் சாலை பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார். அப்போது, உதவி செயற்பொறியாளர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், ஜோதிநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post இளையான்குடி பகுதியில் ஊரணி சீரமைப்பு பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Tamil Nadu Government Food Security Department ,Sivagangai ,District ,Monitoring Officer ,Lalvena ,
× RELATED சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு